பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கென்று அரசுப்பேருந்துகளில் தனி இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருக்கையானது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுநர், நடத்துனர்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.