அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஸ்லேமன்(62) என்பவருக்கு சிறுநீரகம் பாதிப்படைந்ததால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகளில் அந்த உறுப்பு செயலிழந்த நிலையில் தற்போது இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு கடந்த மார்ச் 16ஆம் தேதி பொருத்தப்பட்டது. தற்போது குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.