தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் பைக் ஸ்டண்ட் செய்துள்ளார்‌. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு வாலிபர் ஃபர்தா அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார். அவரின் பின்னால் வாலிபர் ஒருவர் உட்கார்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வாலிபர் கொஞ்சம் கூட பயமில்லாமல் நடுரோட்டில் பைக்கில் ஸ்டண்ட் செய்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ததோடு பின்னால் அமர்ந்த நபர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.