இந்திய அரசியல் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம்,கணினி பொறி அறிவியல் மற்றும் சமூக பொருளாதார நிர்வாகத் திட்டமாகிய பாடப்பிரிவுகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகள் உள்ளன.

இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையின் படி தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட 12 மொழிகள் பாடப்பிரிவு மொழிபெயர்ப்பு இருக்கும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.