இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நிதியாண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்த்தப்பட்ட தற்போது 42 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்டமாக மீண்டும் நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட 18 மாத கால அகல விலைப்படி நிலுவைத் தொகையும் ஊழியர்களின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த அகலவிலைப்படி 46 சதவீதம் உயரும். இதனால் ஊழியர்களின் சம்பளம் வெகுவாக அதிகரிப்பது மட்டுமல்லாமல் அகலவில்லை படி நிலுவைத் தொகை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.