நடைபாண்டில் மிக குறைவாகவே மழை பெய்து உள்ளதால் கர்நாடகாவில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சித்ராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இது பற்றி பேசியுள்ள சித்தராமையா, கேரளா மற்றும் குடகில் மழை குறைந்துள்ளதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. கூடுதல் தண்ணீர் வரும்போது எல்லாம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்துள்ளோம். எங்கள் நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆணைய உத்தரவுப்படி கர்நாடகா தண்ணீர் திறக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.