தற்போது மக்களவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் பல்வேறு துறைகளையும் சார்ந்த அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள். அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசிடம் கிடையாது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 122 அரசு அதிகாரிகளுக்கு பல சேவை விதிகளின் கீழ் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 60 வயதிற்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் டிஜிட்டலைசேஷன் , மின் அலுவலகத்தில் மேம்பட்ட பயன்பாடு, விதிமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் மறு சீரமைப்பு போன்ற பணிகளை மேம்படுத்துவதற்கான தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.