இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள் திருடப்படாமலும் நமது ஃபோனை வேறு நபர்கள் பயன்படுத்தாமலும் தடுக்க மத்திய அரசு உதவுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு, தொலைந்த செல்போன் கண்டுப்பிடிக்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை சிம் கார்டுகள் மட்டும் முடக்கப்பட்ட நிலையில், இனி ceir.sancharseathi.gov.inல் புகார் அளித்தால், மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக, IMEI எண்ணை பயன்படுத்தி தொலைந்த செல்போனை 24 மணி நேரத்தில் முடக்கலாம். யார் பெயரில் எத்தனை செல்போன், சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்து இணையதளம் வாயிலாக அறியலாம்