இந்தியாவில் பெண்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் மகப்பேறு விடுமுறை வழங்குவதைப் போல குழந்தை பராமரிப்பு விடுப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவைகளை வழங்கும் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அகில இந்திய சேவை விதிகள் திருத்தம் செய்யப்பட்டு ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை வளர்ப்பு விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவைகளை வழங்கும் பெண் ஊழியர்கள் மற்றும் விதவை அல்லது விவாகரத்து பெற்ற ஒற்றை ஆண் ஊழியர்களுக்கும் 730 நாட்கள் வரை குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும் என யூனியன் பணியாளர் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறை மத்திய சேவை அதிகாரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.