உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சங்கீதா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி ரவீந்திர அகிர்வார் என்ற கணவனும்,  3 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் சங்கீதா முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகள் என்று கூறப்படும் நிலையில், ரோகித் என்ற வாலிபருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் சங்கீதா அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில் அவருடைய 12 வயது மகள் கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ரோகித் கதவை பூட்டிக் கொண்டதால் உடனடியாக வாடகைக்கு இருந்தவரின் உதவியோடு போலீசாருக்கு அவருடைய மகள் தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சங்கீதா உடம்பில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரின் அருகில் மெத்தையில் அவருடைய கணவர் மயக்க நிலையில் கிடந்த நிலையில், ரோகித் கையில் மதுபான கோப்பையுடன் இருந்துள்ளார். இதில் போலீசார் ரோகித்தை கைது செய்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து 4 காலியான மது பாட்டில்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சங்கீதா மற்றும் ரவீந்திர இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்ப வாழ்க்கை முற்றிலும் சீரழிந்து விட்டது.

குறிப்பாக சங்கீதா மது குடிப்பதற்காக வீட்டில் உள்ள பொருட்களை கூட விற்பனை செய்துள்ளார். அதோடு சங்கீதாவை பார்ப்பதற்காக அவருடைய காதலன் ரோகித் அடிக்கடி அவர்களுடைய வீட்டிற்கு செல்வது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட தெரிந்த சம்பவமாக இருந்துள்ளது. ஆனால் ரவீந்திரநாவும் மது போதையில் இருந்ததால் தன்னுடைய மனைவி காதலனுடன் உல்லாசத்தில் இருப்பதை அறியவில்லை. இந்த நிலையில் தான் தற்போது ரோகித் சங்கீதாவை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் ரோகித் மற்றும் ரவீந்திரா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.