தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளும், கட்சித் தாவல்களும் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமக தரப்பில், என்.டி.ஏ (NDA) கூட்டணியில் ராமதாஸை இணைக்கக் கூடாது என அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நிபந்தனை விதித்துள்ளதாகவும், அதேசமயம் திமுக கூட்டணியில் ராமதாஸைச் சேர்க்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நடிகர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன் பிறகு திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தற்போது அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களும் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை திமுக எம்எல்ஏ ஒருவர் பகிரங்கமாக விமர்சித்தது அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அந்த கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது பரபரப்பாக பிரிக்கப்படுகிறது.
அதாவது மதுரையில் காங்கிரஸிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக கட்சித் துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
