மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்திற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் பத்து லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை வருகை தர உள்ளனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால் காவல்துறை போக்குவரத்து பாதைகளை மாற்றம் செய்துள்ளது.

அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி வழியாக வாகனங்கள் செல்லலாம் எனவும் தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் மற்றும் திண்டுக்கல் வழியாகவும் சென்னையில் இருந்து தென் மாநிலத்திற்கு வரும் வாகனங்கள் கொண்டாம்பட்டி மற்றும் நந்தம் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.