சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “Cuffed Together” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு இந்து கணவன் மற்றும் கத்தோலிக்க மனைவி இணைந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அழகான தருணங்கள் பதிவாகியுள்ளன.

கணவன் ஒரு பக்தி பூர்வமான ஹிந்து – சாய் பாபாவும் விநாயகரும் இவரது வழிபாட்டு தெய்வங்கள். 2017ஆம் ஆண்டு சதுர்த்தி நாளில், ‘நான் இவரை எனது மனைவியாக வேண்டவில்லை… இவரைப் போல பண்பு நிறைந்த, மதிப்பளிக்கும் ஒரு துணை  வேண்டுகிறேன்’ என்று சொன்னவர், அடுத்த வருடம் 2018ல் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, விநாயகரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Chrismita D’costa (@the.manifest.girl)

“>

மனைவி மதரீதியான பழக்கவழக்கங்களில் பெரிதாக ஈடுபடாதவராக இருந்தாலும், விநாயகர்  சதுர்த்தி வந்ததும் வீட்டை அலங்கரித்து, ஆரத்தியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக விழாவை அனுசரிக்கிறார். “இதெல்லாம் எங்களுக்கு மதம் அல்ல, காதலும், ஒருமைப்பாடும் தான் முக்கியம்.

இப்போது கணபதி எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி” எனக் கூறும் அவர், தங்களது உறவின் பலத்தைக் குறிப்பிட்டுள்ளார். 2018 முதல் 2025 வரைக்கும் ஒவ்வொரு வருடமும் கணபதி விழாவை உற்சாகமாக கொண்டாடும் இந்த தம்பதியின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ‘மதத்தை தாண்டியும் அன்பும் மதிப்பும் நிலைத்திருக்க முடியும்’ எனக் கருத்துகள் தெரிவித்துள்ளனர். “நான் ஒரு கத்தோலிக்கராக இருந்தாலும் சதுர்த்திக்குப் போவதைக் விரும்புகிறேன்; என் நண்பர்கள் கிரிஸ்துமஸ்க்கு வருகிறார்கள். இது தான் மதங்களுக்குப் பொதுவான உண்மையான கொண்டாட்டம்” என்று ஒருவர் பதிவு செய்துள்ளார்.

காதலும் நம்பிக்கையும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் மனப்பான்மையும் எவ்வளவு வலிமையானது என்பதை இந்த தம்பதியின் வாழ்கை நம் கண்களுக்கு முன்னே வைத்திருக்கிறது.