உத்தரபிரதேச மாநிலத்தின் மத்துரா நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் அருகே வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது மூன்று முதல் நான்கு நாய்கள் திடீரென விரட்டி வந்து கடித்து தாக்கியுள்ளன. இந்த பயங்கரமான சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், சிறுமி வலியால் அழுகிற காட்சிகள் தெளிவாக இருக்க, அருகில் சென்ற இரு இளைஞர்கள் உடனே ஓடி வந்து கையில் உள்ள குழாயால் நாய்களை விரட்டி துரத்துகின்றனர்.
7 yo Kid, Shrishti attacked by group of stray dogs in Mathura
https://t.co/pKZznUobbz— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 30, 2025
“>
இந்த கொடூரமான வீடியோவில் ஒரே நேரத்தில் சிறுமி மீது மூன்று நாய்கள் தாக்கும் காட்சி மக்கள் மனதை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பிற்பகுதியில் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலரும் கடும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். “நாய்கள் மீது அன்பு வைத்தால் மட்டும் போதாது; அவை எந்த நேரத்திலும் பயங்கரமாக மாறும்,” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த வீடியோவை நீதிமன்றத்திலும் காட்ட வேண்டும்” என்றும், “முன்பு உச்ச நீதிமன்றம் எடுத்த கட்டுப்பாட்டு தீர்மானம் சரியானதாக இருந்தது” எனக் கூறி, இந்த நாய்கள் உருவாக்கும் ஆபத்துகளை கண்கூடாக நம்மால் பார்க்க முடிகிறது என்றார்கள். சிறுமியின் உயிர் தப்பியிருக்கிற நிலையில், மத்துரா நகரத்தில் இந்த சம்பவம் மீதான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
