கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்ஷா ஜாகிர் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி, மிகவும் கடினமான ‘சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை’ மிகுந்த பக்தியுடனும் துல்லியமான உச்சரிப்புடனும் பாடி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு முஸ்லிம் சிறுமி இவ்வளவு தெளிவான சமஸ்கிருத உச்சரிப்புடன் சிவபெருமானின் சக்திவாய்ந்த பாடலைப் பாடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, குறுகிய காலத்திலேயே ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், பல லட்சம் விருப்பங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ansha Zakir (@zakirhusaink)

“>

இந்நிலையில் அன்ஷா ஜாகிரின் இந்த முயற்சி மதங்களைக் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் கலைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது. நிலம்பூர் பகுதியைச் சேர்ந்த இவர் ஏற்கனவே இசைத்துறையில் ஆர்வம் கொண்டவர் என்றாலும், இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரம் அவருக்கு இந்தியா முழுவதும் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளது.

மேலும் பலரும் அவரது குரல் இனிமையையும், உச்சரிப்புத் திறனையும் பாராட்டி வரும் நிலையில், எதிர்காலத்தில் ஒரு சிறந்த பின்னணி பாடகியாக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அன்ஷா தெரிவித்துள்ளார். இவருடைய இந்த வீடியோ இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் நல்லிணக்கத்திற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.