மதுரா ரயில் நிலையத்தில் 7.2 அடி உயரமுள்ள நபர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இமாம்ஷு சின்ஹா என்ற இந்த நபர், தனது அசாத்தியமான உயரத்தால் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகளை வியப்பில் ஆழ்த்தினார்.
மேலும் ‘தி பிக்மேன்’ என்று அழைக்கப்படும் இவர் ரயிலை விட்டு இறங்கியவுடன், அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, சிலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று பார்த்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை இமாம்ஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பொதுவாக 5 முதல் 6 அடி உயரமுள்ள மனிதர்களைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, 7 அடிக்கும் அதிகமான உயரத்தில் ஒருவரைப் பார்ப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக அமைந்தது.
இந்நிலையில் பல இணையவாசிகள் இவரை இந்தியாவின் மிக உயரமான உள்ளடக்க உருவாக்குநர் எனப் பாராட்டி வருவதுடன், இவரைப் பார்ப்பது ஏதோ ஒரு அதிசயத்தைக் காண்பது போல் இருப்பதாகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
