மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும் வன்முறை ஏற்பட்டது.

அப்போது மணிப்பூர் இம்பாலிலுள்ள பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது சில போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி அவரது வீட்டுக்கு தீவைத்துள்ளனர். இச்சம்பவத்தின் போது அமைச்சர் வீட்டிலில்லை. சென்ற 20 தினங்களில் மணிப்பூரில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 4-வது சம்பவம் இதுவாகும்.