மக்களின் கவனத்தை திசை திருப்ப வெறுப்பு பிரச்சாரத்தை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது என்பது கசப்பான உண்மை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடப்பதாக India Hate Lab’s குழுவின் “Hate Speech Events In India அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மீதமுள்ள 25% பாஜக ஆளாத மாநிலங்கள் என்றாலும், அதிலும் அதிக அளவில் வெறுப்பு பேச்சுக்கள் பாஜக தலைவர்களிடம் இருந்தே வந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் வெறுப்பு பேச்சுகள் 62% அதிகரித்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.