ஒருக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற படங்களாக இருக்கும் திரைப்படங்களை இப்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. இதேபோன்று இந்தியில் பல வருடங்கள் ஓடி சாதனை படைத்த படம் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே. இது கடந்த 1995 ஆம் வருடம் வெளியாகியது. மும்பையில் ஒரு தியேட்டரில் மட்டும் தொடர்ந்து பல வருடங்கள் இத்திரைப்படத்தை திரையிட்டு வந்தனர். ஷாருக்கான், கஜோல் போன்றோர் நடித்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய திரைப்படங்கள் பற்றி நடிகை கஜோல் கூறியதாவது “மக்கள் அனைவரும் தற்போது உலக சினிமாவை பார்க்க தொடங்கிவிட்டனர். நாம் எடுப்பதை விட நல்ல திரைப்படங்களை அவர்கள் பார்க்கிறார்கள். இனிமேலும் பழைய சினிமாக்கள் இந்த காலத்திற்கு ஒத்துவராது என்று நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்