நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேச பக்தி உணர்வை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2022 ஆம் வருடம் 23 கோடி குடும்பங்கள் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினார்கள். இந்த ஆர்வத்தையும் தேசபக்தியையும் தொடரும் விதமாக இந்த வருடம் ஆகஸ்டு 13 முதல் 15 வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக தேசிய கொடிகள் விற்பனை செய்வதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சமூக ஊடக கணக்குகளின் DP-யிலும் தேசியக் கொடியை வைக்க கோரிய பிரதமர், இது நாட்டிற்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் என்றார். இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.