திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றால் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 4 வருடங்கள் ஆகியும் இன்னும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கூட கேள்வி எழுப்பி வருகிறது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனை தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியும் உறுதிப்படுத்தியுள்ளார். இது பற்றி கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வதற்கான ஸ்மார்ட் மீட்டர்கள் டெண்டர்கள் விரைவில் விடப்பட உள்ளது. அந்த மீட்டர்கள் பொறுத்தப்படுவதற்கு ஏற்ப உடனுக்குடன் மாதாந்திர மின் கணக்கிடு முறையும் அமலுக்கு வரும் என்று கூறினார். மேலும் இதன் மூலம் விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் செய்யும் முறை அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
