தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் நிலையில் நாளை முதல் பருவ மழை தீவிரமடைகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக எடுத்து வருகிறது. இன்று பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் நாளை முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதோடு மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களையும் தயார் நிலையில் மாநகராட்சிகள் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கனமழையின்போது வெள்ளம் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சமயத்தில் பாம்புகள் போன்ற விஷப் பூச்சிகள் தண்ணீருக்குள் வீட்டிற்குள் வரலாம். அதோடு தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது விஷப்பூச்சிகளின் நடமாட்டம் என்பது இருக்கலாம். இதன் காரணமாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால் உடனடியாக மக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக போன் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால் மக்கள் உடனடியாக 044-22200335 என்ற தொலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம்.