இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆன்லைனில் ஓட்டல்களுக்கு ரேட்டிங் அளித்து பகுதி நேரமாக சம்பாதிக்கலாம் என்ற பெயரில் நடந்த மோசடியில் சிக்கிய மும்பையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் 18 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜை நம்பி ரேட்டிங் அளித்த அவருக்கு 1500 ரூபாய் கிடைத்துள்ளது. அதனைப் போலவே எளிய முதலீட்டில் லாபம் ஈட்டலாம் என்று தங்களது குழுவில் இணைத்த மோசடி கும்பல் அவரின் வங்கி விவரங்களை திருடி 18 லட்சம் ரூபாயை அபேஸ் செய்துள்ளது.