இந்தியாவில் பல ஜாதி மதத்தினர் இருந்து வரும் நிலையிலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடும் மத வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் கேரளாவில் சன்னி பிரிவு இஸ்லாமி அமைப்பு ஒன்று அந்த மாநிலத்தில் மத மறுப்பு திருமணங்களுக்கு சிபிஎம் கட்சி ஆதரவளிப்பதாகவும் இதன் காரணமாக இஸ்லாமிய பெண்களின் அடையாளம் அழிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

இஸ்லாமிய அமைப்பின் இந்த தாக்குதலுக்கு கேரள முதல்வர் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாதி மத மறுப்பு திருமணங்களுக்கு எப்பொழுதும் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இருவர் திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மத மறுப்பு திருமணங்கள் அதிக அளவில் நடந்து வருக நிலையில் முதல்வருடைய இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.