மகளிர் உரிமைத்தொகை மாதம் மாதம் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகள் உள்ளனர். விரைவில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகையை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பயனாளிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் மகளிர் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கார்டு வைத்திருந்தாலே மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என சிலர் தவறாக புரிந்து கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் கிடையாது.
அரசு இந்த திட்ட பயனாளிகளுக்கு ஒரு சில அடிப்படை விதிமுறைகளை விதித்தது. ரேஷன் கார்டில் வசிக்கும் முகவரியில் இல்லாதவர்கள் முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் தவறாக இருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர்.
ஆய்வு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பலன் கிடைக்கவில்லை. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்போது விடுபட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால் முகவரி மாற்றம் ஆவணங்கள் முறையாக இல்லாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அந்த பிரச்சனை இருப்பவர்கள் அருகில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு சென்று உரிய விளக்கத்தை பெற்று ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டால் மது ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
