இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வாங்கிய பொருள் சரியில்லாததால் புகார் அளிக்க இணையத்தில் கஸ்டமர் கேர் எண் தேடி உள்ளார். அதிலிருந்த என்னை தொடர்பு கொண்டு அவர் புகார் அளித்தார். அதில் பேசிய நபர் உங்கள் மொபைல் எண்ணுக்கு லிங்க் ஒன்று அனுப்புகிறோம் அதனை கிளிக் செய்யுங்கள் என கூறியதும் உடனே அவர் அதனை கிளிக் செய்த நிலையில் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை மறும நபர்கள் திருடி விட்டனர்.

இந்நிலையில் கடை அல்லது ஆன்லைனில் வாங்கிய பொருளாக இருந்தால் சம்மந்தப்பட்ட ரசீதுகளில் உள்ள கஸ்டமர் கேர் எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எண்கள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட எங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் இணையதளத்தில் தேடுதலில் கிடைக்கும் எண்களில் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என சைபர் கிரைப் போலீசார் எச்சரித்துள்ளனர்.