தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து யார் யாருக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. மேலும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை காண விண்ணப்பங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் முகாம்கள் அமைக்கப்பட்ட அதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் ஒரு கோடி குடும்ப தலைவிகள் பயன்பெறுவார்கள் எனவும் ஆயிரம் ரூபாய் யாருக்கு அவசியமோ அந்த குடும்பத் தலைவிகளுக்கு கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக இந்த ஆயிரம் ரூபாய் வழிவகை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.