அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாகத்துறை கைது செய்தது செல்வம் என்றும் அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கணக்கில் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இது அமைச்சருக்கு புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது. அதேசமயம் செந்தில் பாலாஜி ஏன் கைது செய்யப்பட்டார் என்பது எல்லாம் அவருக்கே நன்றாக தெரியும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது மற்றும் நீதிமன்ற காவல் இரண்டும் சட்டபூர்வமானது என்று நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதோடு அமைச்சரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அமைச்சரை காவலில் எடுக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி எப்போது காவல் என்பதை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.