
தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
நேற்றைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டிருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதுச்சேரி சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
தென்கிழக்கு வந்த கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி இன்று சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பெங்கல் என்ற பெயரை பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இருக்கும் 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆவின் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம்
- அண்ணா நகர் டவர் பூங்கா பாலகம்
- மாதவரம் பால் பண்ணை பாலகம்
- வண்ணான் துறை பாலகம் மற்றும் பேஷன்ட் நகர் பாலகம்
- வசந்தம் காலனி பாலகம் அண்ணா நகர் கிழக்கு
- சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்
- விருகம்பாக்கம் பாலகம் வளசரவாக்கம் மெகா மார்க்கெட் அருகில்
- சிபி ராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்.
மேற்கூறிய இடங்களில் தங்கு தடை இன்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும். ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.