இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல் போலி கணக்கு தொடங்கி ஏமாற்றுவது அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், whatsapp தளங்களில் தெரிந்தவர்கள் போல பண உதவி கேட்டால் அவர்களுக்கு போன் செய்து விசாரித்துவிட்டு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் 1376 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.