சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து தான் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது.

இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கின் மீதான விசாரணையில், தற்காலிகமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்று இறக்கிக் கொள்ளலாம் என நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.