இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி கியூ ஆர் கோட் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடி வழியில் சிக்கி விடாமல் உஷாராக இருக்க வேண்டுமென மத்திய அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் குற்றவாளிகள் மோசடி இணையதளங்களுக்கு கொண்டு செல்லும் ஆபத்தான க்யூ ஆர் கோடை மொபைல் எண்ணுக்கு அனுப்புகின்றனர். இதனை ஸ்கேன் செய்தால் பிரவுசரில் மோசடி தளங்களுக்கு இட்டுச் செல்லும். எனவே ஒவ்வொரு முறை க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் முன்பும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.