
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் ஷேகான் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் நிரப்பியுள்ளார். அப்போது அவர் செல்போன் பயன்படுத்தியதால் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடினார். ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர் தீயணைப்பு கருவியை வைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
VIDEO : खिशात मोबाईल वाजला अन् पेट्रोल पंपावर पेट्रोल भरताना उडाला आगीचा भडका, CCTV समोर! pic.twitter.com/RulDoUzQTR
— News18Lokmat (@News18lokmat) May 12, 2025
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் யூபிஐ போன்ற டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.