மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயதான பிரதீப் ஜெயின் என்ற இளைஞர், வாட்ஸ்அப்பில் வந்த ஒரு புகைப்படத்தை டவுன்லோட் செய்ததால்  தனது கனரா வங்கி கணக்கில் இருந்து ரூ.2.01 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த நபரை உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வியுடன் ஒரு முதியவரின் புகைப்படம் வந்தது. அதற்குள் ஹேக்கிங் லிங்க் இருந்தது. பிரதீப் அதை தொட்டதும், சில நிமிடங்களில்அவரது வங்கி கணக்கில் இருந்து 2 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து பிரதீப் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இது போன்ற சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக, சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பல வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளனர். முக்கியமாக, அறியப்படாத எண்ணிலிருந்து வந்த மீடியா கோப்புகளை திறக்க வேண்டாம், WhatsApp-இல் auto-download அம்சத்தை முடக்கவும், “Silence Unknown Callers” அம்சத்தை செயல்படுத்தவும் என அறிவுறுத்துகின்றனர்.

அதோடு, உங்கள் மொபைலை தொழில்நுட்ப ரீதியாக புது பாதுகாப்பு அப்டேட்களுடன் வைத்திருக்கவும், OTPஐ யாரிடமும் பகிர வேண்டாமென வலியுறுத்துகின்றனர்.