இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஆன்லைன் பணப்பரிவினை அதிகரித்து வரும் நிலையில் ஏடிஎம் கார்டு செயலிழக்கப்பட்டது என்று கூறி ஒரு லிங்கை அனுப்பி கிளிக் செய்து மீண்டும் கார்டை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதும் உண்மை என நம்பி பலரும் லிங்கை கிளிக் செய்கிறார்கள்.

அவ்வாறு லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களது அக்கவுண்டில் இருந்து மொத்த பணமும் திருடப்படும். எனவே தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு மெசேஜ்க்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர், பாஸ்வேர்டு மற்றும் ஓடிபி நம்பர் உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது