இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களின் சேவைகளை வீட்டில் இருந்தவரை முடித்துக் கொள்கின்றனர். அதன்படி உலகம் முழுவதும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களை காட்டிலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதள பக்கங்கள் மூலமாக அதிக அளவிலான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அமேசான்,பிளிப்கார்ட் மற்றும் மீசோ போன்ற செயலி மூலமாக ஆர்டர் செய்யும் போது இந்த ஆர்டர் கைக்கு வந்த பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி உள்ளது.

ஆனால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பக்கங்கள் மூலமாக ஆர்டர் செய்யும் போது அந்த பொருள்களுக்கான முழு பணத்தையும் செலுத்தினால் மட்டுமே வாடிக்கையாளர்களின் ஆர்டர் உறுதி செய்யப்படும். இதுபோன்ற சமூக வலைதள பக்கங்களில் விற்கப்படும் பொருட்களை மிகவும் அழகாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதிக தரம் கொண்ட பொருட்களாக காட்டி பலரும் பொது மக்களை ஏமாற்றுகின்றனர்.

அதேசமயம் இந்த பொருட்களை எல்லாம் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டில் கூட இவ்வளவு நல்ல ஆஃபரில் வாங்க முடியாது என நினைத்து மக்கள் பலரும் ஏமாந்து விடுகின்றனர். பொதுமக்களிடமிருந்து அந்த பொருட்களுக்கான அட்வான்ஸ் தொகையை வாங்கிய பிறகு பல சமூக வலைத்தள பக்கங்கள் மொத்தமாக தொடர்பை துண்டித்து விடுவதாக புகார் அளித்துள்ளது. எனவே சமூக வலைத்தளங்களில் பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.