நாட்டின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய 13 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருவதால் தனது வாடிக்கையாளர்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில் இணையதள முகவரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரி அதிகாரப்பூர்வமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல வாடிக்கையாளர்களுக்கு காட்சியளிக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கமளித்துள்ளது.

அதாவது குறுஞ்செய்திகள் இணைக்கப்பட்டுள்ள லிங்க் முற்றிலும் போலியானது. இதனை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு விடும். அதேசமயம் 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்ற தகவலும் முற்றிலும் போலியானது. வங்கி சார்பாக இதுபோன்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.