பீகார் அர்வால் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 40 பெண்கள் தங்களுடைய கணவரின் பெயர் ரூப்சந்த் என கூறியுள்ளனர்.

அர்வாலின் ஒரு பகுதியில் 40 பெண்கள் ரூப்சந்தை தங்களது கணவர் எனவும் சிலர் ரூப்சந்தை தங்கள் மகன் எனவும் அப்பா எனவும் அழைத்தனர். எனினும் பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொண்ட அதிகாரிகளால் ரூப்சந்த் எனும் நபரை சந்திக்க முடியவில்லை. இத்தகவல் வெளியாகியதை அடுத்து, நிர்வாகத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் பெண்களிடம் அவர்களின் கணவரின் பெயரை கூறுமாறு கேட்டபோது, ஒரே பகுதியில் வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் பெண்கள் தங்களது கணவரின் பெயரை ரூப்சந்த் என தெரிவித்தனர். உண்மையில் இந்த பெண்கள் வசிக்கும் இடம் சிவப்பு விளக்கு பகுதி ஆகும். இங்கு இருக்கும் பெண்கள் காலம் காலமாக ஆடியும் பாடியும் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.