
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.