
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மார்ச் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இயல்பைப் பொறுத்தவரையில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். சில இடங்களில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இரண்டும் இருக்கக்கூடும் என்பதால் அசோகரியமான சூழல் ஏற்படலாம். மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.