விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தார்.

ஒருபுறம் மக்களுக்காக ஓடி ஓடி உதவி செய்த நிஷாவின் பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதாவது குழந்தைக்கு டைபாய்டு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அறந்தாங்கி நிஷா மட்டுமல்லாமல் அவருடைய கணவரும் அவருடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் அவரின் குழந்தை விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.