சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தலைவர் ஜெய்ஷா. இவர் உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன். கடந்த மாதம் ஜெய்ஷா ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு 35 வயது ஆகிறது. இதன் காரணமாக ஐசிஐசியின் இளம் தலைவர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இன்று உள்துறை மந்திரி அமைச்சர் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் அங்கு சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

அவருடைய மகன் ஜெய்ஷாவும், புனித நீராடினார். அப்போது தன்னுடைய கைக்கு குழந்தையை ஜெய்ஷா தூக்கி வந்தார். அந்த நிகழ்ச்சியின் போது அங்கிருந்த துறவிகள் ஜெய்ஷாவின் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கினர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.