மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி (86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள பிடி ஹிந்துஜா மருத்துவமனையில் குடும்ப உறுப்பினர்களால் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிர முதல்வராகவும், 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராகவும் பணியாற்றினார்.