ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், பெண் வாக்காளர்களை திமுக குறிவைத்துள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்காத லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால், விரைவில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் லிஸ்ட்டை எடுத்து ரூ.1000 வழங்கவும், இதற்காக மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.