தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 11.5 முறையீடு செய்த நிலையில் அதில் இரண்டு லட்சம் பேர் இந்த மாதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் உரிமை தொகை பெறுவோர் எண்ணிக்கை 1. 15 கோடியாக அதிகரித்து உள்ளது.