தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியானது.அதன்படி செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகளில் தமிழக அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். குடும்ப அட்டை,வயதுவரம்பு மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்ப தலைவிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தகுதி வாய்ந்தவர்களின் உரிமை தொகையை வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.