மகர ராசி அன்பர்களே,

இன்று அனைவரிடமும் நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். செயல்களில் அதிக நேர்த்தி காணப்படும். தொழில் நுட்ப அறிவு கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அனுகூலமான நல்ல சூழல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

பண வரவு இருக்கும். எதிர்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் மூலம் தேவையான பண உதவிகள் கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி கொள்வீர்கள். இன்று பெண்களுக்கு இனிய பயணங்கள் அமையும். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும்.

பெண்கள் இன்று நிம்மதியுடன் காணப்படுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். மாணவர்கள் முழு முயற்சி எடுத்தால் வெற்றி வாகை சூட முடியும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்