தனுசு ராசி அன்பர்களே,

இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய சூழல் உள்ளது. காரியங்கள் மிகவும் அற்புதமாக நடக்கக்கூடும். மனதில் இருந்த கவலை சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணி மேற்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பெண்கள் இன்று சமைக்கும் போது கவனமாக இருங்கள். யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். அனுசரித்து செல்வது நல்லது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்