விருச்சிக ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெரும் சூழல் உள்ளது. இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தின் வளர்ச்சி வியப்படையும் வகையில் இருக்கும். இன்று எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. அக்கம் பக்கத்தினரிடம் சண்டை சச்சரவுகள் ஏற்படும். கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழல் இருக்கும். கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும். மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆசை கனவுகள் பூர்த்தியாகும். வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு 
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்