கும்ப ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக எது சரி எது தவறு என்று சரியான தீர்மானத்தை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் இன்று இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதலாக பணிபுரிய வேண்டி வரும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவலாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். இன்று புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக விலகி செல்லக்கூடும்.

வீண் அலைச்சலை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். இன்று எதிலும் முன்னேற்றம் ஏற்படும். எதிர்தரப்பு வாதங்களையும் கேட்டு அதன் பின் நியாயம் சொல்வது நல்லது. நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். இன்று பெண்கள் சுகபோக வாழ்கையை அனுபவிக்க முடியும். பிள்ளைகளிடம் கொஞ்சி பேசி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க முடியும்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். காரியங்களை முன்கூட்டியே தீர்மானித்து செயல்பட வேண்டி இருக்கும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்